Saturday, July 24, 2010

சுத்தம் சோறு போடும்

சுத்தம் சோறு போடும்


குப்பைத் தொட்டியில் வாசகம்,
சுத்தம் சோறு போடும்...
குப்பைத் தொட்டியை துழாவும்,
ஏழைச் சிறுவன் எச்சில் சோற்றைத் தேடி,
குப்பைத் தொட்டியை சுத்தம் செய்கிறான்,
அந்தச் சுத்தம் அவனுக்கு சோறு போடுகிறது...

கண்டு கொள்ள மாட்டாயா

கண்டு கொள்ள மாட்டாயா



கண்டு கொள்ள மாட்டாயா,
கண்டு எனைக் கொள்ள மாட்டாயா,
கண்டு உனை கண்டு கொள்ள வில்லையென,
கடிந்து எனை கொன்று விட்டாயே,
கடின மொழி பேசி,
கனக்கிறது இதயம்,
கண்கள் பனிக்கிறது,
கண்மணி எனை புரிந்துகொள்வாள் என,
கண்டிப்பாக நம்பி இருக்கிறேன்,
கவனிப்பாய் என எண்ணி,
காத்திருப்பேன்,
காலமெல்லாம்.

காதல் பிராணாயாமம்

காதல் பிராணாயாமம்



மூச்சு விடுவதில் கோளாறு,
தினமும் பிராணாயாமம் செய்தால்,
சரி ஆகிவிடும் என்றார்களே யோகக் கலையில்,
வருடங்கள் பல முயன்று அதைச் சரி செய்தேனே,
உனை கண்ட நொடியில் மறுபடியும் அதே கோளாறு,
மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்குதே வயசுக் கோளாறால்,
உனக்கு பிராண நாதனாய் நானாகிவிட்டால் பிராணாயாமம்,
செய்யாமலே காதல் கலையில் சரி ஆயிடுமே, கற்றுத்தர வந்துவிடு....

தமிழுக்கு பிறந்தவள்

தமிழுக்கு பிறந்தவள்



தமிழுக்கு பிறந்தவளே,
காதல் கவிதையில் சிறந்தவளே,
காதல் சொல்ல மறந்தாயே ஏன்?
காலமெல்லாம் காத்திருப்பேன் நான்,
கைபிடித்து கடைசிவரை நீ என்னுடன் வர,
உன் பாதம் பட்ட பூமி உன் பாதம் மீண்டும் பட ஏங்கும்,
உன் பாதம் தரை பட விடாமல் கைகளில் ஏந்திச் செல்வேன்,
உன் இதயம் போற்றுவேன், மனம் குளிர்விப்பேன், உடன் வாயேண்டி,
தமிழுக்கு பிறந்தவளே காதல் கவிதையில் சிறந்தவளே காதல் சொல்ல வாயேண்டி...

குற்றம் மற சுற்றம் போற்று

குற்றம் மற சுற்றம் போற்று


குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை,
உற்றுப் பார்க்காமலே அருகினில்,
உறவொன்றும் இல்லை,
உணர்ந்து பார்க்கையில்,
உறுத்துதே உள்ளம்,
உறுத்தும் வரை,
விடாது சுற்றம்,
போற்று,
சுகம்,
பெரு.

காகத்தை காக்கா பிடிக்கிறேன்

காகத்தை காக்கா பிடிக்கிறேன்


காக்கா கா கா என கரைவதால் காக்காய் ஆனதா?
காக்காய் என அழைப்பதால் கா கா என கரைகிறதா?
நாம் காலை, கையை பிடிப்பதற்கு காகத்தின் பால் பழி,
அதற்கு காக்கா பிடிப்பது என்ற அவப் பெயர் வேறு நம்மால்.
நொடிக்கு நூறு முறை அதன் பெயரையே சொல்லும் ஒரே உயிரினம் காக்கா.
நாம் புறத்தில் இடும் கழிவுகளை சுத்தம் செய்யும் பறவை - ஸ்காவேன்ஜெர் பறவை.
நம் அகத்தில் சேரும் கழிவுகளை ஏ காகமே நீ சுத்திகரிப்பாயா? அதற்கு உனை நான் காக்கா பிடிக்கிறேன்.

ஆடித் தள்ளுபடி

ஆடித் தள்ளுபடி


ஆடி மாசம் வந்திடிச்சு,
தள்ளுபடி விற்பனை ஆளை மயக்குது,
ஆடித் தள்ளுபடியில் ஆடிப் பாடி வாங்க போனேன்,
கூட்ட நெரிசல்ல தள்ளுப்பட்டு, தள்ளாடியபடியே விழுந்தேனே,
கடைப் படிக்கட்டிலிருந்து, இது தான் ஆடித் தள்ளுபடியென உணர்ந்தேனே,
மருத்துவரைப் பார்த்து காயத்த போக்க, பட்ட அடிய நீக்கப்போக ஆத்தாடி, அம்மாடி,
வந்த பில்ல பார்த்து மயங்கித்தான் போனேனே - டாக்டர் சார் ஆடித் தள்ளுபடி பில்லுல உண்டா சார்?